National Voters Service Portal  Direct Verify   Anti-Ragging Committee   Heber Mail     Alumni    

About

Program Offered

Syllabus

Research

Faculty


Contact Person

தமிழாய்வுத் துறை

பிஷப் ஹீபர் கல்லுரி தமிழாய்வுத் துறை தமிழகத்தில் தனக்கெனத் தனி இடம் பெற்றுள்ளது. தமிழாய்வுத் துறையில்..

  • தமிழ் எம்.எ (1981 யில் தொடங்கப்பட்டது)
  • தமிழ் எம்.பில் பகுதி நேரம், முழு நேரம்(1984-85 யில் தொடங்கப்பட்டது)

  • பயிற்றுவிக்கும் பாடங்கள்:

    தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள் போன்ற மரபு சார்ந்த கல்வி, தற்கால இலக்கியங்கள் பற்றிய கல்வி, நாட்டுபுறவியல், தொடர்பியல், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், கலை சொல்லாக்கம் போன்ற பிற துறைக் கல்வி, திராவிட இலக்கியம், ஒப்பிலக்கியம், இலக்கிய இயக்கங்கள் பற்றிய கல்வி, மாணவர்கள் படைபாளராக திகழப் படைப்பில்லகியம் பற்றிய கல்வி, திறனாய்வு அடிப்படைகளை பற்றிய கல்வி முதலியவை தமிழ் முதுகலையில் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்றுத் தரப்படுகின்றன.


    பயிற்றுவிக்கும் முறை:

    வகுப்புறையில் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் தெளிவாக சொல்லி தருதல், மாணவர் கருத்தரங்குகள் , ஆசிரியர் கருத்தரங்குகள் , வகுப்பறை விவாதங்கள், நாடகப்பதிவு, தொலைகாட்சி, ஆகியவற்றைப் பின்பலமாக கோண்டு தேவையுள்ள பாடங்களை கற்பித்தல், ப்ரொஜெக்டர் வாயிலாக தெளிவுறுத்தல், தேவையான போது அந்தந்த இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விளக்குதல், ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்..


    துறை நோக்கம்:

    பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களையும், இடைக்கால இலக்கியங்களையும், தற்கால இலக்கியங்களையும், நாட்டுப்புறவியல், தொடர்பியல், மொழி பெயர்ப்பு போன்ற தமிழ் சார்ந்த பிறபடிப்புகளையும் மாணவர்கள் நன்கு ஆழ்ந்து கற்க வேண்டும் என்பதும், தாம் பெற்ற பரந்த கல்வியறிவின் துணை கொண்டு நல்ல வேலை வாய்ப்பினை பெற தமிழ் பேரவை வாயிலாக தமிழ் அறிஞர்கள் பலர் ஆண்டுதோறும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றல் வாயிலாகவும், அறிஞர்கள் வாயிலாகவும், முனைவர் பட்ட வாய் மொழியாகவும் இத்துறையில் பயிலும் மாணவர்கள் மேலும் பரந்த அறிவை பெறுகின்றனர்.