Bishop heber College - Department

(இரண்டு ஆண்டு பட்டமேற்படிப்பு - பகுதிநேரம் மற்றும் முழுநேரம்)

இப்பட்டப்படிப்பிற்கு உரிய நோக்கங்கள்

 • தமிழின் மரபையும் வரலாற்றுப் பெருமிதத்தையும் உணரச் செய்தல்.
 • இன்றைய சமூக வாழ்வில் மொழி, இலக்கியக்கல்வியின் தேவை, இன்றியமையாமையை அறிவுறுத்தல்.
 • இலக்கியங்களை வரலாற்று அடிப்படையிலும் வகைமை நோக்கிலும் கற்பித்தல்.
 • சமூக நோக்குடைய கதை, கவிதைப் படைப்பாளர்களை உருவாக்குதல்.

வகுப்பறையில் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் தெளிவாகச் சொல்லித் தருதல், மாணவர் கருத்தரங்குகள், ஆசிரியர் கருத்தரங்குகள், வகுப்பறை விவாதங்கள், நாடகப்பதிவு, காணொளி ஆகியவற்றைப் பின்புலமாகக்கொண்டு தேவையான பாடங்களைக் கற்பித்தல், பெருந்திரை (Power Point) வாயிலாகத் தெளிவுறுத்தல், பாடம் தொடர்பான இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விளக்குதல் உள்ளிட்ட முறைகளில் மாணவர்களுக்கு எமது பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். நூலகப் பயன்பாட்டிற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அங்குக் கற்கும் புதிய கருத்துகள் ஒப்படைவாகப் பெறப்படுகின்றன. திட்டக் கட்டுரை எழுதுவதற்கு முன்னோட்டமாகப் பேராசிரியர்கள் தலைமையில் வாரந்தோறும் வகுப்பறை மாணவர் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. துறையின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

(இரண்டு ஆண்டு பட்டமேற்படிப்பு - பகுதிநேரம் மற்றும் முழுநேரம்)

இப்பட்டப்படிப்பிற்கு உரிய நோக்கங்கள்

 • தமிழ் ஆராய்ச்சியின் வரலாற்று வளர்ச்சி நிலைகளை முழுமையாக அறியச் செய்தல்.
 • நவீனத் திறனாய்வுக் கோட்பாடுகளையும் ஆய்வு அணுகுமுறைகளையும் கற்றுத் தருதல்.
 • தமிழ் கற்றல் கற்பித்தலில் உள்ள நுட்பங்களை இனங்காட்டுதல்.

தமிழில் நிகழ்த்தப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆராய்ச்சிகளையும் ஆய்வாளர்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல். அதன் நீட்சியாகச் செய்து முடிக்க வேண்டிய ஆய்வுக்களங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. தங்கள் ஆய்வுத்தலைப்புக் குறித்து முடிவெடுக்க மாணவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்படுகின்றது. எந்தத் தலைப்பையும் மாணவர்களிடம் திணிப்பது கிடையாது. அறிவியல்பூர்வமான முறையியலுடன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. நூல் விமர்சனம், திரை விமர்சனம் முதலியவை கற்பிக்கப்படுகின்றன. களஆய்வு செய்யும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற முதுகலைத்தமிழ்ப் பட்டமேற்படிப்பில் 55 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தமிழ் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) பட்ட வகுப்பில் சேரத் தகுதியானவர்கள் ஆவர்.

இப்பட்டப்படிப்பிற்கு உரிய நோக்கங்கள்

 • மொழி, இலக்கியக் கல்வி வாயிலான சமூகத் தேவையை ஈடுசெய்தல்.
 • தமிழ் மொழி, இனம், கலை, பண்பாடு சார்ந்த அடையாளங்களை, மரபுகளை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகி ஆராய்தல். அதன்வழி காலத்திற்கேற்ற சமூக உறவைக் கட்டியெழுப்பத் துணைநிற்றல்.
 • தமக்கென ஓர் ஆய்வுக்களத்தையும் வாழ்க்கைத்தடத்தையும் மாணவர்கள் உண்டாக்கிக் கொள்ளுதல்.

ஆய்வாளர்களிடம் பன்முக அறிவு, ஆளுமை, செயற்திறம், முடிவெடுக்கும் துணிவு, சமூக நோக்கம் ஆகிய பண்புகள் வளர வழிவகை செய்யப்படுகின்றது. எமது துறையில் முழுநேர முனைவர் பட்டம் மேற்கொள்வோர் பெரும்பான்மையர் அரசின் நிதியுதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தின் தலைச்சிறந்த நூலகங்களில் எமது கல்லூரி நூலகமும் ஒன்று. தமிழ் தொடர்பான ஆய்வை நிகழ்த்துவதற்குப் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. தமிழாய்வுத்துறையின் மிகப் பெரும்பான்மையான பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றோர்; முனைவர் பட்ட நெறியாளர்கள். தமிழின் பல தளங்களிலும் வழிகாட்டக் கூடியவர்கள்.

வழிகாட்டப்படும் ஆய்வுக்களங்கள்

 • செவ்விலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால இலக்கியம்.
 • இலக்கணம், மொழியியல்.
 • மொழிபெயர்ப்பியல், ஒப்பிலக்கியம்.
 • இறையியல், அறவியல்.
 • தொல்லியல், நாட்டுப்புறவியல்.
 • கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை.
 • இதழியல், மக்கள் தொடர்பியல்.

முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும்போதே கற்பித்தல் பயிற்சிக்காக முதுகலைத்தமிழ் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவும், தேர்வு நேரங்களில் கண்காணிப்புப் பணி செய்யவும், துறையின் சில நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று நிகழ்த்தவும் வாய்ப்புத் தரப்படுகின்றது. பல்கலைக்கழக மானியக் குழு உதவியுடனான பேராசிரியர்களின் பெருந்திட்ட ஆய்வுகளில் உதவியாளர்களாகவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இதனால் கற்றலுடனான பொருளீட்டலும் சாத்தியப்படுகின்றது.